"ஸ்ரீமத் புஷ்பாசல நிவாச ஸ்ரீ க்ருபா ப்ரகாஸ பதான்ய பரம ஸ்ரீ மூர்த்தி'
திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் வள்ளளார் சுவாமி சிதம்பர இராமலிங்க அடிகளார் அவ்வப்போது சென்று வந்த மலையும் மலைக்குள் குகையும் அவரது வெண்கலச் சிலையும் பண்ருட்டி அருகே உள்ளது பண்ருட்டியில் இருந்து 12 கிமீ தூரத்தில் உள்ள சென்னப்ப நாயக்கன் பாளையத்தையொட்டிய புஷ்பகிரி எனப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் இந்த்ச் சிலை உள்ளது இப்போது உச்சிப்பிள்ளையார் கோயில் என அழைக்கப்படும் இந்த மலைக்கோயில், பண்டைய காலத்தில் மலையாண்டவர் கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் அம்மன் சன்னதியிலிருந்த புத்தராக, சமண தீர்த்தங்கரரின் சிலையாக இருக்கலாம் என இக்கிராம மக்கள் கருதி வந்தனர். இந்தச் சிலையின் அடியில் "ஸ்ரீமத் புஷ்பாசல நிவாச ஸ்ரீ க்ருபா ப்ரகாஸ பதான்ய பரம ஸ்ரீ மூர்த்தி'' என்று சம்ஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டு்ள்ளது இது வள்ளலாரின் உருவச் சிலை என உருதியாகிறது.
ம்48 செ.மீ உயரமும், 22 செ.மீ அகலமும், 60 செ.மீ சுற்றளவும் கொண்ட இந்தச் சிலை, இடது கால் மீது வலது காலை மடித்து வைத்தும், இடது கை மீது வலக்கையால் மூடிய முத்திரை மற்றும் தியான நிலையில் காணப்படுகிறது. இந்தச் சிலையை 1905ம் ஆண்டு பண்ருட்டியை சேர்ந்த ச.சொக்கலிங்க செட்டியார், விழமங்கலம் ந.வேலாயுத செட்டியார் ஆகியோர் தர்மம் செய்ததாகவும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது. தண்டயுதபாணி முருகன் சன்னிதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த 98 படிகள் கொண்ட மலைக் கோவிலை சுற்றி பல யோக சித்தர்கள் லிங்கவட்டு சமாதி அமைந்துள்ளது . கோட்டை கொத்தள அமைப்புடைய சுட்ட செங்கல் கட்டிட அமைப்பை உடையது.
மேலும் 1862ம் ஆண்டு வள்ளலார் எழுதிய கடிதம் ஒன்றில், "கருங்குழியிலிருந்து வடமேற்கே ஓர் ஊருக்குப்போய் அவ்விடத்தே முடிக்க வேண்டிய காரியத்தை முடித்துக் கொண்டு.. தற்காலத்தில் யான் வசிக்கும் இடம் இது வென்று குறிப்பதற்கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் வள்ளலார் வாழ்ந்த இடங்களில் புஷ்பகிரியும் ஒன்று என்று தெரியவருகிறது
"அருட்பெருஞ் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ’’
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வையக உயிர்கள் எல்லாம்
சன்மார்க்கிகள் மகிழ்வுக்கான நோக்கத்துடன் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது தவறு இருப்பின் மன்னிக்கவும்
"ஸ்ரீமத் புஷ்பாசல நிவாச ஸ்ரீ க்ருபா ப்ரகாஸ பதான்ய பரம ஸ்ரீ மூர்த்தி'